மிதக்கும் ‘கீபோர்டு’
கீபோர்டில் உள்ள விசைகள் ஒவ்வொன்றும் காந்தவியல் நுட்பத்தில் மிதக்கும் வகையில் உள்ளது.
முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனமான டெல், சமீபத்தில் எக்ஸ்.பி.எஸ்.15 மாதிரி மடிக்கணினியை அறிமுகம் செய்துள்ளது. இது 18 ஜி.பி. ராம் நினைவகம் முதல் 16 ஜி.பி. ராம் நினைவகம் வரை அதீத நினைவுத்திறனுடன் வெளிவந்துள்ளது. இதில் அதிகபட்சம் 1 டெராபைட் அளவுள்ள தகவல்களை சேமிக்கவும் வசதி செய்யப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் கூடுதல் சிறப்பம்சமாக, பறக்கும் ரெயில்களில் பயன்படுத்தப்படும் மால்கெவ் காந்தப்புல நுட்பத்தைப் பயன்படுத்தி, இதன் கீபோர்டு (விசைப்பலகை) உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கீபோர்டில் உள்ள விசைகள் ஒவ்வொன்றும் காந்தவியல் நுட்பத்தில் மிதக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது தட்டச்சு செய்யும் வேகத்தை பல மடங்கு அதிகப்படுத்தும் என்று உரிமை கோரி உள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் இந்த மடிக்கணினி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story