ஐகோர்ட்டு உத்தரவுப்படி திருப்புல்லாணி பள்ளி கட்டிடத்தின் தரத்தை அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் தரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தது.
ராமநாதபுரம்.
திருப்புல்லாணி அருகே உள்ளது தினைக்குளம் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டன. தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக புகார் எழுந்த இந்த கட்டிடம் நாளடைவில் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் கட்டிடங்கள் ஆங்காங்கே இடிந்து பெயர்ந்து காணப்பட்டன. நீர்கசிவு ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளதாக கூறப்பட்டது. இதன்காரணமாக அந்த கட்டிடத்திற்கு மாணவ-மாணவிகள் செல்வதற்கு அச்சப்பட்டதால் பெற்றோர் குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டனர்.
இதனால் பள்ளி கட்டிடத்தில் வகுப்புகளை நடத்தாமல் மரத்தடியிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் அந்த பகுதியில் அபாயம் என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளி கட்டிடம் குறித்து அறிந்த மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு மேற்பார்வை பொறியாளர் குமாரி ஷீலா நேற்று பள்ளிக்கு நேரில் சென்று கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்தார். பள்ளி கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு செய்த அவர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், கட்டிடத்தின் தன்மை மற்றும் அதன் தரம் குறித்தும் விரிவான விசாரணை மேற்கொண்டார். அவருடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தினகரன், உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் உடன் சென்றனர்.
பள்ளி கட்டிடம் கட்டியது பொதுப்பணித்துறை என்பதால் துறை சார்ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தினைக்குளம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் பொதுப்பணித்துறையினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆய்வு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள எங்களிடம் எந்தவித விசாரணையோ, கருத்துக்களோ கேட்கவில்லை. எதற்காக இந்த அவசர ஆய்வு என்று தெரியவில்லை. இந்த கட்டிட முறைகேட்டில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story