பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வற்புறுத்தி முன்னாள் மாணவர்கள் கோஷம்
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வற்புறுத்தி முன்னாள் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோஷமிட்டு மனு கொடுத்தனர்.
கோவை,
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த அருண் மீனா, தினேஷ், ராம்குமார், தாயுமானவன் உள்ளிட்டோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். துணைவேந்தர் கணபதி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாங்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் புகார் மனுக்கள் அளித்து உள்ளோம். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
கடந்த 2016-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் 82 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. மேலும் தொலை தூர கல்வியில் எம்.எஸ்.சி. படித்து முடித்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. மேலும் ஒரு பணியிடத்துக்கு ரூ.35 லட்சம் தொடங்கி ரூ.60 லட்சம் வரை பணபேரம் நடைபெற்றது.
இதுகுறித்து நாங்கள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மீது அப்போதே நடவடிக்கை எடுத்து இருந்தால் தற்போதைய நிலை ஏற்பட்டு இருக்காது. எனவே இந்த பணி நியமனங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவ்வாறு முறைகேடாக நடைபெற்ற பணி நியமனங்கள் குறித்து விசாரிக்க தனி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
அப்போது பல்கலைக்கழகத்தில் இருந்த ஆட்சி மன்ற குழு (சிண்டிகேட்) துணைவேந்தருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி, துணைவேந்தரின் உதவியாளர், பணி நியமன தேர்வை நடத்திய வல்லுனர் குழு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அவர்களையும் கைது செய்ய வேண்டும்.
துணைவேந்தர் பதவி ஏற்றது முதல் லஞ்சம் பெற்று பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதனை ரத்து செய்வதோடு, தகுதியானவர்களை நேர்மையான முறையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story