வீட்டு வரி உயர்வை கண்டித்து போடி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
வீட்டு வரி உயர்வை கண்டித்து, போடி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
போடி,
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது நகராட்சியில் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும், கடந்த 2009-ம் ஆண்டு முதல் வரியை செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு அனைத்து கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு போடி நகராட்சி கமிஷனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா, தி.க., தினகரன் அணி, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய வரியையே நீட்டிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வந்து நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்று அனைத்து கட்சியினர் வலியுறுத்தினர்.
வரிவிதிப்பில் மாறுதல் செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டதாகவும், இன்னும் 10 நாட்களுக்கு வேண்டுமானால் வரி உயர்வை தள்ளி வைக்கலாம் என்றும் கமிஷனர் சுவாமிநாதன் கூறினார். இதற்கு அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், வரிவிதிப்பை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி அலுவலக அறைக்கதவுகளை மூடி அதிகாரிகளை முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து கட்சியின் மூத்த பிரதிநிதிகள், அவர்களை சமாதானப்படுத்தினர். வரி உயர்வை எக்காரணம் கொண்டும் அமலுக்கு கொண்டு வரக்கூடாது என்று கோஷமிட்டப்படி அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story