கடன் உதவி வழங்காமல் அலைக்கழிப்பு செய்த கூட்டுறவு கடன் சங்கத்துக்கு பூட்டு போட்டு விவசாயிகள் போராட்டம்
கடன் உதவி வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வந்ததால், விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சி வட்டம் வல்லம் அருகே களையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் களையூர், கடம்பூர், வட்டத்தூர், ஆனங்கூர், நாட்டார் மங்கலம், வடவானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இங்கு நகைகடன், விவசாய கடன், கரும்பு கடன், உரக்கடன் ஆகியன வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இங்கு விவசாய கடன் மற்றும் கரும்பு கடன் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்து வந்துள்ளனர்.
மேலும் கூட்டுறவு சங்கத்துக்கு வரும் விவசாயிகளை அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடன் கேட்டு மனு அளித்து காத்திருந்த விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஒன்று திரண்டு கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள், கடன் சங்கம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் அந்த சமயத்தில் கூட்டுறவு கடன் சங்கம் திறக்கப்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மேலும் ஒரு பூட்டை போட்டு அலுவலகத்தை பூட்டி போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்க தலைவர் சேகர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விரைவில் கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார். இதையேற்று விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து 11 மணிக்கு பிறகு கூட்டுறவு கடன் சங்கம் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story