ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க பெண்கள் கோரிக்கை
நம்பியூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்கள் கோரிக்கை மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
நம்பியூர் அருகே மலையப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள், “எங்கள் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் எங்கள் ஊரை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று மது அருந்துகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவதில்லை. எனவே மலையப்பாளையத்தில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்”, என்று கூறி இருந்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மலையப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை திறந்து இருந்தபோது, மது அருந்திவிட்டு வெளியே வந்த ஒருவர் அந்த பகுதியில் நடந்து சென்ற பெண் மீது மோதினார். இதில் கீழே விழுந்து காயம் அடைந்த அந்த பெண் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். எனவே டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், டாஸ்மாக் கடை மூடப்படும் என்று அறிவித்தனர். அதன்பின்னர் மலையப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்தநிலையில், அங்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் சிலர் மனு கொடுக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-
மொடக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் அமைய உள்ளதாக தகவல் கிடைத்தது. பள்ளிக்கூடம் 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஏழை மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது. எனவே பள்ளிக்கூட கட்டிடத்தை இடிக்காமல் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
டி.என்.பாளையம் அருகே வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் 62 வீடுகள் உள்ளன. ஓடையோரம் வசிப்பதாக கூறி எங்களை காலிசெய்ய வருவாய்த்துறை சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
தாளவாடி விடியல் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், “தாளவாடியில் நவீன சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு ஆஸ்பத்திரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
சித்தோடு பகுதியில் தனியார் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சட்டத்திற்கு விரோதமாக சூதாட்டம் நடத்தப்படுவதால் பலரும் தங்களது பணத்தை இழந்து விடுகிறார்கள். மேலும், சூதாட்டம், பரிசு விவரங்கள் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

சத்தியமங்கலம் வரதம்பாளையம் தோப்பூர்காலனியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். எங்களிடம் பட்டா கிடையாது. அது தனிப்பட்ட ஒருவருக்கு சொந்தமான நிலம். அவர் இறந்துவிட்டார். அவருடைய வாரிசுதாரர்கள் நாங்கள் வசிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. மேலும், எங்களுக்கு பட்டா வழங்க அவர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். எனவே பட்டா வழங்குவதில் உள்ள குளறுபடிகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.
ஆதித்தமிழர் தூய்மை பணியாளர் பேரவை மாவட்ட தலைவர் ஆறுமுகம் கொடுத்த மனுவில், “அவல்பூந்துறை, அறச்சலூர், சிவகிரி, கொடுமுடி, ஊஞ்சலூர், பாசூர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் கொடுக்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்சுந்தரம் கொடுத்த மனுவில், “கடந்த 2007-2008 ஆம் ஆண்டு கிராமப்புற ஏழை மாணவிகளின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்”, என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 306 மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் எம்.பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி ராமசந்திரன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story