பொது சுகாதார காப்பீட்டு திட்டம் விரைவில் அமல் கவர்னர் அறிவிப்பு


பொது சுகாதார காப்பீட்டு திட்டம் விரைவில் அமல் கவர்னர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:45 AM IST (Updated: 6 Feb 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பொது சுகாதார திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கவர்னர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கர்நாடக மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தரமான மருத்துவ சிகிச்சையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பிரசவ காலத்தில் தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பிரசவங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை எனது அரசு செய்து கொடுத்து வருகிறது.

மருத்துவமனைகளில் காலி இடங்களை நிரப்புவது, அனைத்து மாவட்ட, தாலுகா ஆஸ்பத்திரிகளில் மலிவு விலை மருந்து கடைகளை திறப்பது, ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை உறுதி செய்யப்படுகிறது. அனைத்து சுகாதார திட்டங்களையும் ஒருங்கிணைத்து பொது சுகாதார காப்பீட்டு திட்டத்தை எனது அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் 1.4 கோடி குடும்பங்கள் பயன் பெறும்.

ஆரோக்கிய பாக்ய திட்டத்தின் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கும். கிராம பஞ்சாயத்து அமைப்புகளை பலப்படுத்த கர்நாடக கிராம சுயராஜ்ஜிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். 5 ஆயிரத்து 971 கிராம பஞ்சாயத்துகளில் பாபுஜி சேவை மையங்கள் மூலம் 100 விதமான அரசு சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் மூலம் கிராமப்புற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி உள்ளோம். இவ்வாறு கவர்னர் பேசினார்.

Next Story