ஆம்னி வேன் வாய்க்காலுக்குள் பாய்ந்தது கல்லூரி மாணவிகள் உள்பட 31 பேர் காயம்
நொய்யல் அருகே கோவிலுக்கு வந்தபோது விபத்தில் சிக்கிய ஆம்னி வேன் வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதில் கல்லூரி மாணவிகள் உள்பட 31 பேர் காயம் அடைந்தனர்.
நொய்யல்,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜகோபாலன்(வயது 70), ஹேமா(36), அவந்திகா(8), உமாதேவி(60), சண்முகப்பிரியா(35), சஞ்சனா(8), தக்ஷிதா(10), கவிதா(38), காவியா(12), நித்யா(53), ரிதண்யா(2), ராஜலட்சுமி(45), சந்திரா(53), ரஞ்சித்குமார்(38), ராஜேஸ்குமார்(38), நைனிகா(1), பூர்ணிமா(34), கயந்திகா(8), தனவந்த்(5), சந்திரசேகரன்(70), உமா(35), திருப்பூர் பகுதியை சேர்ந்த அங்கப்பன்(44), சர்மிளா(34), பூஜா(12) உள்பட 26 பேர் சென்னிமலையில் இருந்து கரூர் மாவட்டம், புன்னத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு ஒரு ஆம்னி வேனில் ஈரோடு- கரூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். ஆம்னி வேனை சென்னிமலை பகுதியை சேர்ந்த மயில்வேல்(64) என்பவர் ஓட்டிவந்தார்.
அப்போது நொய்யல் அருகே புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வேன் மாணவிகளை ஏற்றிக்கொண்டு கொடுமுடி பகுதியில் இருந்து புன்னம்சத்திரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. கல்லூரிக்கு செல்வதற்காக வேனை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த ஆம்னி வேன் நிலைதடுமாறி கல்லூரி வேன் மீது மோதி அங்குள்ள வாய்க்காலுக்குள் பாய்ந்தது.
இதில் ஆம்னி வேனில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் கல்லூரி வாகனத்தில் இருந்த 5 மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், கல்லூரி வேனில் இருந்த மாணவிகளும் விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் மற்றும் க.பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆம்புலன்சை வரவழைத்து படுகாயம் அடைந்தவர்களை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் காயமடைந்த 5 மாணவிகளை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு வாய்க்காலுக்குள் பாய்ந்த ஆம்னி வேனை மீட்டனர். பின்னர் இதுகுறித்து க.பரமத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story