கார் மீது லாரி மோதல்: டாக்டர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
ஆதனக்கோட்டை அருகே கார் மீது லாரி மோதியதில் டாக்டர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். தஞ்சைக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களுக்கு இந்த துயர முடிவு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள குறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்
சுந்தர்ராஜ் (வயது 36). ஓமியோபதி டாக்டரான இவர் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தார். கரூரை சேர்ந்தவர் கனகராஜ் (35). இவர் புதுக்கோட்டை கம்பன் நகரில் வசித்து வந்தார். அரவக்குறிச்சியை சேர்ந்தவர் உதயக்குமார்(38). இவர்கள் 2 பேரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். 3 பேரும் நண்பர்கள்.
தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பரின் தாயாரை பார்ப்பதற்காக காரில் செல்ல 3 பேரும் முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் ஒரு காரில் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை கனகராஜ் ஓட்டினார். சுந்தர்ராஜ், உதயக்குமார் ஆகியோர் காரில் இருந்தனர். கார் நேற்று காலை ஆதனக்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பட்டி பகுதியில் சென்றது. அப்போது கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது.
இதில் காரில் பயணம் செய்த ஓமியோபதி டாக்டர் சுந்தர்ராஜ் மற்றும் உதயக்குமார், கனகராஜ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் (34) படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆதனக்கோட்டை கிராமமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும், இரும்பு கம்பியால் உடைத்து பெரும் சிரமத்திற்கிடையே மீட்டனர்.
தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த லாரி டிரைவர் மணிவண்ணனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாரி டிரைவர் மணிவண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story