ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை சமையலர்கள் திடீர் முற்றுகை
பணிநீக்கம் செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்ததால் ஆத்திரம் அடைந்த சமையலர்கள் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் சமையலராக பணியாற்றி வந்த 49 பேர் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் போலி பணி நியமன உத்தரவை பெற்று பணிக்கு சேர்ந்ததால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சரவணக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதி உள்ளவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆனால் கடந்த 4 மாதங்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லை. பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் அலைக்கழிப்பு செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த டவுன் போலீஸ் உதவி கமிஷனர் அன்பு மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சமையலர்கள் தரப்பில் கூறும்போது, எவ்வித அறிவிப்பும் இல்லாமல் 49 சமையலர்களை திடீரென பணி நீக்கம் செய்து ஆதி திராவிடர் நல அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி கேட்டால் சரியான பதில் இல்லை. இந்த பிரச்சினை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சிலருக்கு மட்டும் மீண்டும் பணி வழங்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக வேலை இல்லாமலும், குடும்பம் நடத்த முடியாமலும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். எனவே, மீண்டும் பணி உத்தரவு வழங்க வேண்டும். அதோடு, விதிமுறைகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்ட சமையலர்களை நீக்கம் செய்ய வேண்டும், என்றனர்.
இதையடுத்து கலெக்டரின் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சரவணக்குமாரிடம் கேட்டபோது, இதற்கு முன்பு இருந்த அதிகாரிகள், தன்னிச்சையாக செயல்பட்டு விடுதிகளில் சமையல் பணிக்கு சிலரை சேர்த்துவிட்டுள்ளனர். அதாவது, போலி நியமன உத்தரவு தயாரித்து 49 பேர் வேலையில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தேன். ஆனால் சிலரின் தூண்டுதலின்பேரில் தற்போது பிரச்சினை செய்து வருகிறார்கள். எனது விளக்கத்தை கலெக்டரிடம் தெரிவிப்பேன், என்றார்.

Related Tags :
Next Story