கார் மீது முட்டை, தக்காளி வீசப்பட்ட வழக்கு நடிகை குஷ்பு கோர்ட்டில் 12-ந்தேதி ஆஜராக உத்தரவு
கார் மீது முட்டை, தக்காளி வீசப்பட்ட வழக்கில் நடிகை குஷ்பு மேட்டூர் கோர்ட்டில் வருகிற 12-ந்தேதி ஆஜராக வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேட்டூர்,
நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த வக்கீல் முருகன் கடந்த 2005-ம் ஆண்டு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-2 ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-2 ல் குஷ்பு நேரில் ஆஜரானார். பின்னர் அங்கிருந்து திரும்பும்போது ஒரு கும்பல் குஷ்பு கார் மீது அழுகிய முட்டை, தக்காளி போன்றவற்றை வீசியது.
இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் புகார் அளித்தார். அதன்பேரில் மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி, பா.ம.க.வை சேர்ந்த அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற எண்-1 ல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜா, இந்த வழக்கு குறித்த விசாரணையை வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) ஒத்திவைத்தார். மேலும் சாட்சிகளான நடிகை குஷ்பு, போலீஸ் சூப்பிரண்டு தினகரன், ஆகியோரை 12-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story