5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது
திருமணமான பெண் உள்பட 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னனை போலீசார் வேலூரில் கைது செய்தனர்.
வேலூர்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது,
வேலூர் விருதம்பட்டு மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண் கர்நாடக மாநிலம் கோலார்தங்கவயல் அருகேயுள்ள செங்கல் சூளை ஒன்றில் ஒரு வாலிபருடன் தங்கி வேலை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோலார்தங்கவயலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த வாலிபர் இளம்பெண்ணை ஓசூர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு அங்கிருந்து பஸ்சில் வேலூர் வந்துள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் வேலூர் புதிய பஸ்நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ்சில் இருந்து இறங்கிய இளம்பெண் மற்றும் வாலிபரை விருதம்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்ட வாலிபர், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த காளை என்கிற பாபு (வயது 30) என்பதும், இவர் ஏற்கனவே திருமணமான அதே பகுதியை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு விருதம்பட்டு மோட்டூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
அப்போது தான் 16 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலிப்பதாவும், திருமணம் செய்து கொள்வதாகவும் பாபு ஆசை வார்த்தை கூறி உள்ளார். அதனை நம்பிய இளம்பெண் கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி பாபுவுடன் சென்று கோலார்தங்கவயல் அருகே உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில் பாபு மேலும் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. ஒருபெண்னுடன் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு என உல்லாசமாக குடும்பம் நடத்துவார். பின்னர் மற்றொரு பெண்ணை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து விட்டு, ஏற்கனவே திருமணம் செய்த பெண்ணை கைவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காட்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாண மன்னன் பாபுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் பாபுவை போலீஸ் காவலில் எடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story