தீப்பெட்டி குடோனில் பயங்கர தீ விபத்து
கோவில்பட்டியில் தீப்பெட்டி குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.
கோவில்பட்டி,
கோவில்பட்டி- இளையரசனேந்தல் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் தனியாருக்கு சொந்தமான குடோன்கள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. அங்குள்ள பெரிய குடோனில் ஐ.டி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான தீப்பெட்டி பண்டல்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று இரவு 7.45 மணிக்கு அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. உள்ளே தீப்பிடித்து எரிவதை உணர்ந்த காவலாளிகள் இதுகுறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், குடோனில் இருந்த தீப்பெட்டி பண்டல்களில் தீ வேகமாக பரவியது. தொடர்ந்து தனியார் நிறுவனத்தினர் டிராக்டர்களில் தண்ணீரை கொண்டு வந்து, தீயணைப்பு வாகனத்தில் நிரப்பினர். இதனால் இரவில் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சேதம் அடைந்தன. அந்த கட்டிடமும் சேதம் அடைந்தது.
தீ விபத்துக்குள்ளான குடோனை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story