தாவரங்களின் அறிவுக்குக் காரணமான புரதங்கள்!
தாவரங்களுக்கு கண், காது, மூக்கு உள்ளிட்ட எந்த புலன் உறுப்புகளும் கிடையாது.
உலகின் பெரும்பாலான உயிரினங்களின் பசியைப் போக்கும் தாவரங்கள், பல ஆபத்துகளில் இருந்து தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள தங்களுக்குள் தகவல் தொடர்பு செய்துகொள்ளும் திறன் பெற்றவை என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இத்தகைய தகவல்களை அறிந்து கொள்ளும் சாமானிய மனிதர்களுக்கு, தாவரங்கள் எப்படி அவற்றின் சுற்றுச்சூழலை உணர்கின்றன? என்ற அடிப்படையான ஒரு கேள்வி எழும்.
ஏனெனில், தாவரங்களுக்கு கண், காது, மூக்கு உள்ளிட்ட எந்த புலன் உறுப்புகளும் கிடையாது. அதனால் பார்ப்பது, கேட்பது, மற்றும் வாசனை பிடிப்பது உள்ளிட்ட உணர் திறனும் இருக்க வாய்ப்பில்லை. இயற்கை இப்படியிருக்க, தாவரங்கள் தம்மை நோக்கி வரும் ஆபத்துகளை உணர்கின்றன, பின்பு அது குறித்த தகவல்களை தங்களுக்குள் பரிமாற்றம் செய்கின்றன என்றால் அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வியும் குழப்பமும் ஏற்படுவது இயல்புதான்.
தாவரங்களின் தகவல் பரிமாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பது நமக்கு புரியவில்லை என்றாலும், அது நிகழ்வதென்னவோ உண்மைதான் என்று ஒரு புதிய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது அமெரிக்காவில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் ஷாஹித் முக்தார் தலைமையிலான ஒரு ஆய்வுக்குழு.
மனிதர்களுக்கு உள்ளது போன்ற புலன் உறுப்புகள் எதுவும் தாவரங்களுக்கு இல்லையென்றாலும், தங்களின் உயிரணுக்களின் மேற்புறத்தில் இருக்கக்கூடிய புரதங்கள் மூலமாக, தங்களைச் சுற்றியுள்ள ரசாயனங்கள் அல்லது விஷக்கிருமிகளின் புரதங்கள் அல்லது பிற உயிரினங்களின் ஹார்மோன்கள் ஆகியவற்றை உணர்ந்து கண்டறியும் அசாத்திய திறன் தாவரங்களுக்கு உண்டு என்று கண்டறிந்துள்ளது இந்த புதிய ஆய்வு. லியூசீன் ரிச் ரிப்பீட் ரிசெப்டார் கைநேசஸ் (leucinerich repeat receptor kinases, or LRRreceptor kinases) என்று அழைக்கப்படும் இந்த பிரத்தியேக புரதங்கள் நூற்றுக்கணக்கான வகைப்படும் என்றும், இவை ஒவ்வொன்றும் தாவரங்களின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பல்வேறு வகையான உளைச்சல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் ஆகியவற்றுக்கு பங்களிக்கின்றன என்கிறார் துணைப் பேராசிரியர் முக்தார்.
முக்கியமாக, இத்தகைய சுமார் 200 புரதங்கள் அவற்றின் செயல்பாடுகளை முக்தாரின் ஆய்வுக்குழு இந்த புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த 200 புரதங்களின் செயல்பாடுகள் குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், நமக்கு உணவாகப் பயன்படும் தானிய மற்றும் காய்கறித் தாவரங்களின் கிருமி எதிர்ப்புத் திறன், அல்லது வெப்பம், வறட்சி, உப்புத்தன்மை மற்றும் குளிர் தாங்கும் திறன் ஆகியவற்றை அதிகப்படுத்த முடியும் என்கிறார் முக்தார். இந்த ஆய்வில், லியூசீன் ரிச் ரிப்பீட் ரிசெப்டார் கை நேசஸ் புரதங்களின் பல்வேறு பாகங்கள் முதலில் ‘குளோனிங்’ செய்யப்பட்டு பின்னர் அவை அனைத்தும் இரண்டு இரண்டு பகுதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு இடையில் தொடர்புகள் அல்லது செயல்பாடுகள் நிகழ்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த புரதங்களின் பல புதிய செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, தாவரங்களின் புலனறிவுக்குக் காரணமான சில புரதங்கள் நீக்கப்பட்ட சில மரபணு மாற்றத் தாவரங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றின் மீதான பரிசோதனைகளில், அவை இல்லாதுபோனால் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
ஆக மொத்தத்தில், இந்த புதிய ஆய்வின் மூலம், பல பிரத்தியேகத் திறன்கள் கொண்ட தாவரங்களை உருவாக்க முடியும் என்றும், உதாரணமாக, ரிமோட் சென்சர் போல இயங்கும் இயங்கும் தாவரங்களை உருவாக்கி ராணுவத் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story