தூத்துக்குடி மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் மதிப்பீடு செய்ய புதிய வசதி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் மதிப்பீடு செய்ய புதிய வசதி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Feb 2018 2:30 AM IST (Updated: 6 Feb 2018 8:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியின் சேவைகளை பொதுமக்கள் மதிப்பீடு செய்வதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியின் சேவைகளை பொதுமக்கள் மதிப்பீடு செய்வதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதியை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.

புதிய வசதி

தூத்துக்குடி மாநகராட்சி மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகள் மக்களுக்கு முழுமையாக பயனுள்ளதாக உள்ளதா? அதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பது குறித்து மக்கள் மதிப்பீடு செய்யவும், அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கவும் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாநகராட்சிக்கு பிரத்யேக “கியூ.ஆர். குறியீடு“ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குறியீடு மாநகரில் மக்கள் கூடும் இடங்கள் உள்பட 117 இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் செல்போன் மூலம் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து சேவையை மதிப்பீடு செய்யலாம். தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

தொடக்க நிகழ்ச்சி

இந்த திட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் பொதுமக்கள் மாநகராட்சியின் சேவைகளை மதிப்பீடு செய்து ஒத்துழைப்பு தருமாறு ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.


Next Story