கூடலூர் அருகே காட்டு யானை தாக்கிய பெண்ணை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய வாலிபர்
கூடலூர் அருகே காட்டு யானை பெண் படுகாயம் அடைந்தார். அவரை தோளில் தூக்கி சென்று வாலிபர் ஒருவர் காப்பாற்றினார். அவரையும் காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு அதிகளவு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானைகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி 4–ம் எண் கிராமம் குரும்பர்பாடி ஆதிவாசி காலனியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 38) என்பவர் மேல்கூடலூருக்கு கடந்த 4–ந் தேதி வந்தார். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோக்கால் மலையடிவாரத்தில் புதர்கள் இடையே மறைந்து இருந்த காட்டு யானை சுப்பிரமணியை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா புளியாம்பாரா அருகே காபிக்காடு நாயக்கன்பாடி கிராமத்தை சேர்ந்த கரியன் என்பவரின் மனைவி விஜி (35) அதே பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை 10 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு சென்ற விஜி தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்தார். அவருடன் சில தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறித்து கொண்டு இருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்துக்குள் ஒரு காட்டு யானை ஆக்ரோஷமாக ஓடி வந்தது.
இதை கண்ட தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது காட்டு யானையிடம் விஜி சிக்கினார். அப்போது காட்டு யானை விஜியை துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் தேயிலை செடிகளுக்கு இடையே விழுந்தார். இந்த நேரத்தில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் ஜலீல் (வயது 36) என்பவர் ஓடி வந்து தேயிலை செடிகளுக்கு இடையே பலத்த காயங்களுடன் கிடந்த விஜியை தோளில் தூக்கியவாறு அங்கிருந்து ஓடினார்.
இதை கண்ட காட்டு யானை ஜலீலையும் சிறிது தூரம் விரட்டியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக விஜியை தூக்கியவாறு ஜலீலும் ஓடிச்சென்று உயிர் தப்பினார். பின்னர் கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை கூச்சலிட்டு விரட்டினர். பின்னர் பலத்த காயம் அடைந்த விஜியை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் அப்துல்ரகுமான், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் வனத்துறையினர் பலத்த காயம் அடைந்த விஜியை நேரில் வந்து பார்வையிட்டனர். இதனிடையே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எந்தபலனும் கிடைக்கவில்லை. இதனால் வனத்துறையினர் தொடர்ந்து காட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story