தேவப்பட்டில், கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு; 300 காளைகள் சீறிப்பாய்ந்தன
கல்லல் அருகே தேவப்பட்டில் உள்ள அந்தரநாச்சியம்மன் கோவில் பொங்கல் மற்றும் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 300 காளைகள் சீறிப்பாய்ந்தன.
கல்லல்,
கல்லல் அருகே உள்ளது தேவப்பட்டு. இங்கு பிரசித்திபெற்ற அந்தரநாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் பொங்கல் மற்றும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி நடைபெறும் மஞ்சுவிரட்டும் பிரசித்திபெற்றது.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான செவ்வாய் பொங்கல் மற்றும் திருவிழா நேற்று நடைபெற்றது. திருவிழாவையொட்டி அதிகாலையிலேயே தேவப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக ஏராளமான பெண்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காலையில் ஆங்காங்கே வயல்வெளி மற்றும் கண்மாய்களில் காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை அடக்கினர்.
இதனைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேவப்பட்டு தொழுவத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது தொழுவத்தில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்தி, தொழுவத்திற்கு அழைத்து வந்து அவிழ்த்துவிடப்பட்ட பின்னரே மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டு தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜீத் ஏற்பாட்டில் நடைபெற்றது. முடிவில் மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

Related Tags :
Next Story