மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய பாதுகாப்பு படையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்து குறித்து கோவில் அதிகாரியிடம் விசாரித்தனர்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்றது. இங்குள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள், தூண்கள், பெரிய கோபுரங்கள் ஆகியவை பல நூறு ஆண்டுகளை கடந்தும் அப்படியே கம்பீரமாக உள்ளன.
எனவே இந்த கோவிலை ஏதாவது ஒரு வழியில் சேதப்படுத்த வேண்டும் என்று தீவிரவாதிகள் பலமுறை அச்சுறுத்தி வருகின்றனர்.
இதை அறிந்த மத்திய அரசு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பட்டியலில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளதாக தெரிவித்தது. எனவே கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு படையினர் முடிவு செய்து, மாநில அரசிடம் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, மீனாட்சி கோவிலில் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், கோவிலின் உள்ளேயும், வெளியேயும் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதல் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் தினமும் இருவேளை மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொள்கிறார்கள். இதுதவிர கோவிலுக்குள் தீப்பெட்டி, கேமரா உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் உள்ளேயும், வெளியேயும் 55-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வகையில், பாதுகாப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை, மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு, சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள கடைகள் எரிந்து நாசமாயின. இதனால் கோவில் தினமும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்குமார்பாண்டே தலைமையில், இன்ஸ்பெக்டர் ரிஷிகவுதம் உள்பட 6 பேர் நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திடீரென்று வந்தனர். அவர்கள் கோவிலை சுற்றி வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்து நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதி முழுவதையும் பார்வையிட்டு படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் கோவில் இணை கமிஷனர் நடராஜனை சந்தித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், தீ விபத்து குறித்து விசாரித்தனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, வழக்கமாக நடைபெறும் தொடர் ஆய்வு பணி தான்இது. தீ விபத்திற்கும் எங்கள் ஆய்வுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தனர்.
இன்றும் அவர்கள் கோவிலில் ஆய்வுப் பணியை தொடர உள்ளனர்.

Related Tags :
Next Story