ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது
ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 38.85 அடியாக தண்ணீர் குறைந்து விட்டது.
வைகை அணையின் நீர்மட்டம் குறைந்த நிலையில், பாசன பகுதிகளில் கடந்த மாத இறுதி முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், தேனி மாவட்டத்தில் மழை எதுவும் பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. மூல வைகையாறு மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே வைகை அணையின் நீராதாரமாக விளங்குகிறது. வருசநாடு வனப்பகுதியில் மழை பெய்யாததால் மூல வைகையாற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் போய் விட்டது.
இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் குறைந்து விட்ட நிலையில், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. இதனால் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி தண்ணீர் இன்றி பாறைகள் வெளியே தெரிய தொடங்கி விட்டது. இந்தநிலையில் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 32 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
இதனால் வைகை ஆற்றில் ஓடும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது. ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து மணல்மேடாக காட்சி அளிக்கிறது. அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பகுதிகளில் கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் தண்ணீர் தேவைப்படுவதால், குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story