அரும்பார்த்தபுரம் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் அடித்துக் கொலை
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அருகே தனியார் நிறுவன பெண் ஊழியர் வீட்டில் தனியாக இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரும்பார்த்த புரம் அருகே உள்ள ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவரது மனைவி தீபா (வயது 38). இவர்கள் இருவரும் அய்யங்குட்டிபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர். பிரபுதாஸ் காலை 10 மணிக்கு பணிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். தீபா மதியம் 1-30 மணிக்கு தனது கணவருக்கு மதிய உணவு எடுத்து செல்வது வழக்கம். அவருக்கு உணவு கொடுத்து விட்டு மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி ஆகியும் தீபா தனது கணவருக்கு மதிய உணவு எடுத்துச் செல்லவில்லை. உடனே அவர் தனது மனைவிக்கு போன் செய்தார். அப்போது அவரது செல்போனில் மணி அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் அவர் எடுத்து பேச வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் தன்னிடம் இருந்த சாவியால் வீட்டை திறந்து பார்த்தார்.
அப்போது தீபா தலையில் அடிபட்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட தீபாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன், வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொலை குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தீபா நேற்று மதியம் சமையல் அறையில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து அவரது நகையை திருட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த தீபா அந்த அவர்களை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர்கள் தீபாவின் தலையில் தாக்கி விட்டு அவரது கழுத்தை நெறித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தீபா மயங்கி விழுந்து இறந்துள்ளார். உடனே அந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக அந்த பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தீபாவுக்கு ஹரிபிரசாத்(15) என்ற மகன் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Related Tags :
Next Story