உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி: அகற்றப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி போராட்டம்
மத்தூர் அருகே உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மின் பாதை பணிக்காக விவசாய நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அகற்றப்படும் மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்ற கோரிக்கையினை ஏற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சந்தூரில் குள்ளம்பட்டி செல்லும் வழியில் உள்ள விவசாய நிலத்தில் மின் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கிருந்த 100 மாமரங்கள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட மரங்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் வரதராஜன் தலைமையில், ஏராளமான விவசாயிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அகற்றப்பட்ட மரங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக நிலத்தில் உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். அதற்கு உரிய இழப்பீடு உடனே தருவதாக தெரிவித்தனர். ஆனால் இப்பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இழப்பீடு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே, உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளோம். இழப்பீடு வழங்காத வரையில் பணிகள் செய்ய விடமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story