அரசு ஊழியர்களுக்கு நிகராக சம்பளம் வழங்க கோரி 15-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்


அரசு ஊழியர்களுக்கு நிகராக சம்பளம் வழங்க கோரி 15-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2018 4:15 AM IST (Updated: 7 Feb 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களுக்கு நிகராக வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க கோரி வருகிற 15-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்று சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆண்டாள் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் எலிசபெத்ராணி வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் முருகேசன் அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

அரசு ஊழியர்களுக்கு நிகராக வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாள் அன்று ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) மாநில அளவில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்து வது. ஜாக்டோ-ஜியோ முடிவின்படி வருகிற 21-ந்தேதி முதல் நடைபெறும் தொடர் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வது. இன்று (புதன்கிழமை) அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்தும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில பொருளாளர் சுந்தரம்மாள் நன்றி கூறினார். 

Next Story