சட்ட சேவை விழிப்புணர்வு முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நீதிபதி வழங்கினார்
நாகர்கோவிலில் நடந்த சட்ட சேவை விழிப்புணர்வு முகாமை மாவட்ட நீதிபதி கருப்பையா தொடங்கி வைத்ததுடன், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நாகர்கோவில்,
அரசுகள் செயல்படுத்தும் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு ‘புதிய வடிவிலான சட்ட சேவை‘ என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி புதிய வடிவிலான சட்ட சேவை என்ற விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
முகாமை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், குமரி மாவட்ட தலைமை நீதிபதியுமான எஸ்.கருப்பையா தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஏ.பசும்பொன் சண்முகையா வரவேற்று பேசினார். மாவட்ட நீதிபதி கருப்பையா பேசும்போது கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் இந்தியா முழுவதும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சட்டப்பணியில் இது புதிய வடிவிலான சட்ட சேவையாகும். இது நீதிமன்றமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி ஆகும். நீதித்துறையும், ஆட்சித்துறையும் ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள். அரசுத் திட்டங்கள் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை என்பதால் சுப்ரீம் கோர்ட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு நீதிபதி கருப்பையா பேசினார்.
முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி எஸ்.முருகானந்தம் மற்றும் நீதிபதிகள், கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் மகேஷ், செயலாளர் மரிய ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சார்பு நீதிபதி அமிர்தவேல் நன்றி கூறினார்.
இதில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் திட்டம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கல்வித்துறை, தாட்கோ, போக்குவரத்து துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, வனத்துறை, தபால்துறை போன்ற அரசுத்துறைகளின் சார்பில் தனித்தனியாக 31 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் அந்தந்த துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன. அந்த அரங்குகளில் இருந்தவர்கள் நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக விளக்கமும் அளித்தனர்.
மேலும் இந்த முகாமில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, கல்வித்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை மாவட்ட நீதிபதி கருப்பையா வழங்கினார்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் முதியோர் பென்சன், திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கான நல உதவிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மனு கொடுத்தனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களும் பெறப்பட்டன. இந்த முகாம் மாலை வரை நடைபெற்றது.

Related Tags :
Next Story