பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கரூர் அருகே தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவரை உடற்கல்வி ஆசிரியர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூர்,
கரூர் அருகே மணவாடியில் ஆசிரமம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தை சேர்ந்த ஹாசூதீனின் மகன் ஹரிக்கூர் ரகுமான்(வயது 16) பிளஸ்-1 வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு படித்து வருகிறார். விளையாட்டு வீரரான இவர் கிரிக்கெட், ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது வழக்கம். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கரூர் தாந்தோன்றிமலையை சேர்ந்த பன்னீர்செல்வம்(38).
இந்தநிலையில் மாணவர் ஹரிக்கூர் ரகுமானுக்கும், உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உடற்கல்வி ஆசிரியரிடம் தெரிவிக்காமல், ஹரிக்கூர் ரகுமான் வெளியில் சென்று பல்வேறு போட்டிகளில் விளையாடி வந்துள்ளார். இதனால் உடற்கல்வி ஆசிரியர் ஆத்திரமடைந்து அவ்வப்போது மாணவர் ஹரிக்கூர் ரகுமானை கண்டிப்பாராம்.
இந்தநிலையில் நேற்று மதியம் இடைவேளையின் போது மைதானத்தில் மாணவர் ஹரிக்கூர் ரகுமான் நடந்து சென்றபோது உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் அவரை தடுத்து நிறுத்தி பேசினார். அப்போது மாணவருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த சக ஆசிரியர் ஒருவர் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து பன்னீர்செல்வம் கத்தியை எடுத்து வந்து, ஹரிக்கூர் ரகுமானை சரமாரியாக குத்தினார். இதில் மாணவருக்கு வயிற்றில் இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதி, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது பன்னீர்செல்வத்தை சக மாணவர்கள் தடுக்க முற்பட்டுள்ளனர். பள்ளி மைதானத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்ட சக ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரத்தம் சொட்ட... சொட்ட... நின்ற மாணவரை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தன்னை மாணவர் ஹரிக்கூர் ரகுமான் கத்தியால் குத்தியதாக கூறி, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் சேர்ந்தார். அவருக்கு வலது கையில் லேசான சிராய்ப்புகளும், முகத்தில் லேசான வீக்கமும் இருந்தது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் விரைந்து வந்து பள்ளியிலும், மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினர்.
ஹரிக்கூர் ரகுமான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு சக மாணவர்கள் மற்றும் மாணவரின் பெற்றோர், உறவினர்கள் திரண்டனர். படுகாயமடைந்த மாணவரை கண்டு அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதே நேரத்தில் பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்ற அரசு மருத்துவமனை முன்பு அவரது சக ஆசிரியர்கள் இருந்தனர்.
தனியார் பள்ளி மைதானத்தில் நடந்த இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த மாணவர் ஹரிக்கூர் ரகுமான் நிருபர்களிடம் கூறுகையில், “நான் ஒரு விளையாட்டு வீரர். பல போட்டிகளில் விளையாடுவேன். உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் என் மீது கோபம் கொண்டு சில போட்டிகளில் சேர்ப்பது கிடையாது. என்னிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபடுவார். நான் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளேன். கத்தியால் குத்தியதில் நான் படுகாயமடைந்ததை பள்ளி நிர்வாகத்தினர் எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. நான் மருத்துவமனைக்கு வந்த பிறகு தகவல் தெரிவித்தேன்” என்றார்.
மாணவரின் உறவினர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தனியார் பள்ளியில் நடந்த இந்த சம்பவம் குறித்து மாணவர் களிடமும், ஆசிரியர்களிடமும் வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story