பெண் போலீஸ் அதிகாரியை கடத்தியதாக 4 பேர் கைது


பெண் போலீஸ் அதிகாரியை கடத்தியதாக 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2018 4:57 AM IST (Updated: 7 Feb 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் பெண் போலீஸ் அதிகாரியை கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புனே,

புனே, சிவாஜிநகர் போலீஸ் காலனியில் வசித்து வரும் 29 வயது பெண் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ஹின்ஜேவாடி போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில், சம்பவத்தன்று கட்ரஜ்- தெகுரோடு பைபாஸ் ரோட்டில் நவிமும்பையை சேர்ந்த 4 பேர் அவரை கடத்த முயற்சி செய்ததாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடத்தல் புகார் அளித்த பெண் போலீஸ் அதிகாரி ஏற்கனவே 3 பேர் அவரை மானபங்கம் செய்துவிட்டதாக சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story