மாவட்ட செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Farmers Association demonstrated

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பழனி குளத்து ரவுண்டானா ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழனி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக பழனி குளத்து ரவுண்டானா ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பழனி ஒன்றியக்குழு செயலாளர் கோப்பணன் தலைமை தாங்கினார். மாநில குழு பொதுச்செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் மீது போலீசார் பதிவு செய்துள்ள பொய் வழக்கு களை வாபஸ் பெற வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாக்க மண் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு கைவசம் உள்ள உபரி நிலங்களை நிலமில்லாத விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.