மாவட்ட செய்திகள்

கூடலூர் பகுதியில் பிரிவு-17 நிலத்தில் வசிக்கும் 557 ஆதிவாசி குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் ஆய்வு + "||" + Officers study the authorities to provide electricity connection to the families

கூடலூர் பகுதியில் பிரிவு-17 நிலத்தில் வசிக்கும் 557 ஆதிவாசி குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் ஆய்வு

கூடலூர் பகுதியில் பிரிவு-17 நிலத்தில் வசிக்கும் 557 ஆதிவாசி குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் ஆய்வு
கூடலூர் பகுதியில் பிரிவு-17 நிலத்தில் வசிக்கும் 557 ஆதிவாசி குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான பட்டியலை அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர்.
கூடலூர்,

கூடலூர் பகுதியில் பிரிவு-17 வகை நிலம் உள்ளது. வருவாய் அல்லது வனத்துறைக்கு சொந்தமான நிலமா? என முடிவு செய்யப்பட வில்லை. இது தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை பிரிவு-17 வகை நிலத்தில் வளர்ச்சி மற்றும் கட்டுமான பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என கோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் வருவாய், வனம், காவல் ஆகிய துறையினர் இணைந்து பிரிவு-17 நிலத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.


இதனால் பிரிவு-17 நிலத்தில் எந்தவித அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் என ஆதிவாசி மக்கள் வனம் மற்றும் அதன் கரையோர கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். பிரிவு-17 நிலப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாததால் இந்த வகை நிலத்தில் குடியிருக்கும் ஆதிவாசி மக்களின் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிய வில்லை.

இதையொட்டி கடந்த 2008-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரிவு-17 நிலத்தில் உள்ள ஆதிவாசி கிராம மக்களுக்கு சாலை, நடைபாதை, குடிநீர், மின்சாரம், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களில் மட்டும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

இதையடுத்து ரூ.9 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கி கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக 557 ஆதிவாசி குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர். கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன் தலைமையில் தாசில்தார் அப்துல் ரகுமான் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கூடலூர் புளியாம்பாரா கோழிக்கொல்லி, காபிக்காடு உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் ஆய்வு செய் தனர்.

அப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, கோர்ட்டில் அனுமதி பெற்று ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக கள ஆய்வு நடத்தப்படுகிறது. இதில் 557 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இதனால் தேர்வு செய்யப்பட்ட ஆதிவாசி குடும்பங்கள் மற்றும் அவர்களது வீடுகளை நேரில் பார்வையிட்டு வருகிறோம். தவறுகள்