நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 8:31 AM IST (Updated: 8 Feb 2018 8:31 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, திருவண்ணாமலை கலெக்டரின், ஊழியர் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராணி, நில அளவை துறையை சேர்ந்த செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.

திருவண்ணாமலை கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story