தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான வங்கி கடன் வழங்கும் திட்டம் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான வங்கி கடன் வழங்கும் திட்டம் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Feb 2018 2:30 AM IST (Updated: 9 Feb 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான வங்கி கடன் வழங்கும் திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான வங்கி கடன் வழங்கும் திட்டத்தை ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.

குடிநீர் இணைப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் 1 லட்சத்து 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கக்கூடிய வகையில் 4–வது குடிநீர் குழாய் திட்டம் புதிதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 12 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. புதிய குடிநீர் இணைப்பு பெற மாநகராட்சிக்கு ரூ.17 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்த முடியாமல் பலர் இணைப்பு பெறாமல் உள்ளனர்.

கடன் திட்டம்

இதைத் தொடர்ந்து பாண்டியன் கிராம வங்கி ‘அமுதம்’ என்ற கடன் திட்டத்தின் மூலம் ஒரு குடிநீர் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற விரும்புகிறவர்கள், பாண்டியன் கிராம வங்கியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து கடன் பெறலாம். இந்த கடன் தொகையை 24 மாதங்களில் தலா ரூ.703 வீதம் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்த கடன் திட்டம் அறிமுக நிகழ்ச்சி நேற்று காலை பாரதிநகர் தியாகராஜபிள்ளை பூங்காவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வங்கி பொதுமேலாளர் மோகன், மண்டல மேலாளர் தெய்வநாயகம், கிளை மேலாளர்கள் நெல்லையப்பன், ஜான் ராஜநாயகம், அன்டோ கால்பட், லோபஸ்ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story