மணல் கடத்தியவர் கைது


மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2018 3:30 AM IST (Updated: 9 Feb 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

கீழ்கதிர்ப்பூர் வேகவதி ஆற்றில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே கீழ்கதிர்ப்பூர் வேகவதி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.பிரபாகருக்கு தகவல் வந்தது. உடனே அவர் அந்த பகுதிக்கு போலீசாருடன் விரைந்தார். அப்போது மினி டெம்போவில் மணல் கடத்தியது தெரிய வந்தது.

அதையொட்டி பெரிய காஞ்சீபுரம் வெள்ளக்குளம் தெருவை சேர்ந்த கொட்டல் வீரணன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story