நெல்லை மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி முடிந்தது: 20 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன மாவட்ட வன அலுவலர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் சுமார் 20 ஆயிரம் பறவைகள் கண்டறியப்பட்டன என மாவட்ட வன அலுவலர் சம்பத் தெரிவித்தார்.
அரிய வகை பறவைகள்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி பாசன குளங்கள் நீர்வாழ் பறவைகளின் இருப்பிடமாக உள்ளது. பல குளங்களில் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவு வருகின்றன. குறிப்பிட்ட காலங்களில் வெளிநாட்டு நீர்வாழ் பறவைகள் நெல்லை மாவட்டத்துக்கு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் அதிக அளவு வெளிநாட்டு பறவைகள் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், அரிய வகை பறவைகளும் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளன.
இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையுடன் இந்த பணி நிறைவடைந்தது. பறவைகள் சரணாலயமாக கூந்தங்குளம், அதைச்சுற்றியுள்ள முக்கிய குளங்களான காடன்குளம், திருமலாபுரம், ராமகிருஷ்ணாபுரம், சிலையம், டானார்குளம், கோடன்குளம், விஜயநாராயணம் மற்றும் திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகம் ஆகியவற்றில் கணக்கெடுக்கப்பட்டன.
20 ஆயிரம் பறவைகள்
இதுகுறித்து நெல்லை மாவட்ட வன அலுவலர் சம்பத் கூறுகையில், கணக்கெடுப்பின் போது கூளக்கடா, செங்கால் நாரை, பாம்பு தாரா, பட்டை தலை வாத்து, ஊசிவால் வாத்து, பூ நாரை, வளக்கால் உள்ளான், கருப்பு வெள்ளை அரிவாள் முக்கன், கரண்டிவாயன் மற்றும் வெளிநாட்டு பறவைகளான வரித்தடை பின்டயல், கார்கனி உள்பட 25 வகையான நீர் பறவைகளும், 20 வகையான நில வாழ்பறவைகளும் என மொத்தம் 20 ஆயிரம் பறவைகள் கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட்டு உள்ளது என்றார்.
இந்த கணக்கெடுப்பு பணியில் நெல்லை உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) கவுதம், உதவி வனப்பாதுகாவலர் முத்தையா, வனச்சரக அலுவலர் தார்சியஸ், வனவர் சரவணகுமார், தொழில் நுட்ப உதவியாளர் கந்தசாமி, வனக்காப்பாளர்கள் கந்தசாமி, முருகையா, பறவை காவலர் பால்பாண்டி, மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story