மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து: நிபுணர் குழு ஆய்வு தொடங்கியது
மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் நிபுணர் குழுவின் ஆய்வு நடவடிக்கை நேற்று தொடங்கியது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபமும், அதில் அமைந்திருந்த கடைகளும் எரிந்து நாசமாயின.
தீ விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்ய அரசு 12 நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்தது. இந்த குழு உறுப்பினர்கள் அனைவரும் நேற்று காலை கோவிலுக்கு வந்தனர். அவர்கள் ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயர் பாலசுப்பிரமணியம் தலைமையில், தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பணிகளை எப்போது தொடங்குவது, ஆயிரங்கால் மண்டபத்தை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பிறகு அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
குழுவின் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-
“மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் சேதம் அடைந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் நடந்தது. குழுவினர் அனைவரும் வீரவசந்தராயர் மண்டபத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடினோம். ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றிலும், பாதிப்பு அடைந்த பகுதிகளையும் மேலும் சேதம் அடையாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய முனைப்பான பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.”
சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் அருண்மேனன் கூறியதாவது:-
“வீரவசந்தராயர் மண்டபத்தில் பாதிப்பு அதிகம் உள்ளது. அந்த பகுதியில் மேலும் சேதம் வராமல் தடுத்து, மண்டபத்தை காப்பாற்றுவது தான் எங்களின் நோக்கம்.
அடுத்ததாக பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, அதில் மிகவும் பாதிப்பு அடைந்த மேற்கூரைகள், தூண்கள் ஆகியவற்றை கண்டறிந்து, அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேலை பார்க்க உள்ளவர்களுக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்தோம்.
வீரவசந்தராயர் மண்டபத்தில் பணிகளை செய்யும் போது, அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளோம். இனிவரும் கூட்டத்தில் இந்த பகுதியை சீரமைப்பு செய்வது பற்றி முடிவு செய்வோம்.”
அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் கூறியதாவது:-
“திருக்கோவிலின் அமைப்புகளில் பாதுகாப்பு எப்படி உள்ளது. விபத்து ஏற்பட்டுள்ள பகுதியை எப்படி சீர்செய்வது, கோவிலின் ஸ்திரத்தன்மை என்ன என்பது குறித்து முதல் கூட்டத்தில் பேசியுள்ளோம். அடுத்த கூட்டங்களில் தான் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம். தற்போது எங்கெங்கு விரிசல் உள்ளதோ அங்கு முட்டுக் கொடுத்து வேலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு சேதம் வராமல் எப்படி பாதுகாப்பது என்று ஆலோசித்தோம். முதலில் அந்த பகுதியில் மணல் பைகளை போட்டு பாதுகாக்க முடிவு செய்துள்ளோம். இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கோவிலில் உள்ள கடைகளை அகற்றியே ஆக வேண்டும். இந்த கடைகள் திருக்கோவிலின் பாதுகாப்பிற்கு பங்கமாக உள்ளன. தீ விபத்துகளை எப்படி தடுப்பது குறித்து தனியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் ஆலோசனையின் பேரில் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் கோவில் நிதி மூலம் தான் மேற்கொள்ளப்படும். தற்போது வரை சேத மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. வீரவசந்தராயர் மண்டபத்தில் 7 ஆயிரம் சதுரஅடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சில பகுதியில் மேற்கூரைகள், தூண்களில் சேதம் அதிகமாகவும், சில இடங்களில் சேதம் குறைவாகவும் உள்ளது. எனவே அந்த பகுதியை எந்த அளவுக்கு பாதுகாக்க முடியுமோ அந்த அளவிற்கு பாதுகாப்போம்.
விபத்து நடந்த பகுதியில் சில இடங்களுக்கு செல்வதற்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கு முட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு இல்லை. அங்கு தான் சிற்பங்கள், சிலைகள் அதிகமாக உள்ளன. ஆனால் வீரவசந்தராயர் மண்டபத்தில் தூண்கள் மட்டும் தான் இருக்கின்றன. ஏற்கனவே அந்த பகுதியில் சேதம் அடைந்த 2 தூண்களை அகற்றி வேலை செய்து வருகிறோம். மேலும் கோர்ட்டு உத்தரவின்படி கோவிலில் உள்ள கடைகளை அகற்றுவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story