வால்பாறையில் 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி கவ்விச்சென்று கடித்து கொன்றது
வால்பாறையில் வீட்டின் பின்புறத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை சிறுத்தைப்புலி கவ்விச்சென்று கடித்துகொன்றது.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் வடக்கு பிரிவு தொழிற்சாலை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முஷ்ரப் அலி (வயது 35). இவருடைய மனைவி சுபியா. இவர்கள் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். அவருடைய மகன் சைதுல் (4).
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வீட்டுக்கு பின்புறத்தில் சிறுவன் சைதுல் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அருகில் உள்ள தேயிலை தோட்ட பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி ஒன்று பாய்ந்து வந்தது.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சைதுலின் கழுத்தை சிறுத்தைப்புலி கவ்விப்பிடித்தது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனை தூக்கிக்கொண்டு சிறுத்தைப்புலி ஓடியது. சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் ஓடினர். அப்போது சிறுத்தைப்புலி சிறுவனை வாயில் கவ்வியபடி பாய்ந்து ஓடியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டவாறு, சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலியை துரத்தினர். ஆனால் அதற்குள் அது, சிறுவனை கடித்து கொன்று விட்டு, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள புதர்மறைவில் வைத்து சிறுவனின் தலையை கடித்து தின்றுவிட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு ஓடியது. இதுகுறித்து வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலின் பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேனி, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் மற்றும் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனைதொடர்ந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அங்குள்ள தோட்ட தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் சிறுவனின் உடலை எடுத்துச்செல்ல விடாமல் தடுத்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், சிறுத்தைப்புலி அடித்துக்கொன்ற சிறுவனின் குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், சிறுத்தைப்புலியை சுட்டுக்கொல்ல உறுதி அளிக்க வேண்டும் அப்போதுதான் சிறுவனின் உடலை எடுக்க அனுமதிப்போம் என்றனர். இதற்கிடையில் தகவல் அறிந்தும் சுற்றுப்புற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தாசில்தார் குணசேகரன், வனத்துறையினர் மற்றும் போலீசார் அங்கு திரண்ட தொழிலாளர்களிடம் நள்ளிரவு வரை சமரசம் பேசி, உடலை எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story