கடத்தி செல்லப்பட்ட 'காதல் மனைவியை மீட்டுத்தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்'
காப்பகத்தில் இருந்தபோது கடத்தி செல்லப்பட்ட ‘காதல் மனைவியை மீட்டுத்தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என வாட்ஸ்-அப்பில் பரவும் தஞ்சை வாலிபரின் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த உத்தமதானபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சோமு. இவருடைய மகன் கார்த்திக்(வயது 21). இவர் டிப்ளமோ ஆட்டோமெபைல் என்ஜினீயரிங் படித்து விட்டு பாபநாசத்தில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். பாபநாசத்தை அடுத்த தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் மெர்லின் பியூலா(21). இவர், நர்சிங் படித்துள்ளார்.
கார்த்திக், பாபநாசத்தில் தான் படித்தார். அப்போது அவருக்கும், மெர்லின்பியூலாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் மெர்லின் பியூலாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் இந்த காதலுக்க எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் கண்டித்துள்ளனர். மேலும் அவர்கள், தங்கள் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனை அறிந்த காதலர்கள், கடந்த மாதம் 29-ந் தேதி திருவையாறில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் அவர்கள், திருப்பந்துருத்தியில் வசித்து வந்தனர். இதற்கிடையில் காதல் திருமணம் செய்த இவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி தஞ்சம் அடைந்தனர்.
அப்போது போலீசார், பெண் வீட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மெர்லின்பியூலாவை, கடுவெளியில் உள்ள காப்பகத்தில் தங்க வைப்பதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், மெர்லியின்பியூலா யாருடன் செல்ல விரும்புகிறாரோ? அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காப்பகத்திற்கு மெர்லின் பியூலா அனுப்பி வைக்கப்பட்டார்.
காப்பகத்தில் இருந்த மெர்லின்பியூலா குறித்து கார்த்திக் விசாரித்தபோது அவரை, அவரது உறவினர்கள் அழைத்துச்சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது மனைவியை, அவருடைய உறவினர்கள் கடத்திச்சென்று விட்டதாக கார்த்திக் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால் இந்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இது குறித்து கார்த்திக், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் மனு கொடுத்துள்ளார். ஆனால் அங்கும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், கார்த்திக் பேசும் பேச்சு அடங்கிய ஒரு வீடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில், கார்த்திக், தனது காதல் மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும், அதற்கு காரணமான 3 போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது மனைவியை மீட்டுத்தராவிட்டால் தான், தற்கொலை செய்து கொள்வேன் என்றும், தன்னுடைய சாவுக்கு அந்த போலீஸ் அதிகாரிகள் தான் காரணம் எனவும் அந்த வாட்ஸ்-அப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story