கோபி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
கோபி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 12 பேர் காயம் அடைந்தார்கள்.
கடத்தூர்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கடுமட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் தோட்டவேலைக்காக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். இதற்காக சுற்றுலா வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர். இந்த வேனை கடுமட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 42) ஓட்டினார். இரவு நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் சென்ற வேன் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் நள்ளிரவு வந்து கொண்டு இருந்தது. அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.
12 பேர் காயம்
இதனால் தூக்க கலக்கத்தில் இருந்த தொழிலாளர்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். “அய்யோ, அம்மா” என அலறினர். இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் சக்திவேல், கணேசன் (28), சித்ரா (25), பார்வதி (37), ராமாயாள் (40), கனகா (26), சடையன் (30), லட்சுமன் (30) உள்பட 12 பேர் காயம் அடைந்தார்கள் இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்கள். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story