வருகிற 18-ந் தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மங்களூரு வருகை கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்


வருகிற 18-ந் தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மங்களூரு வருகை கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 9 Feb 2018 3:00 AM IST (Updated: 9 Feb 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 18-ந் தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மங்களூரு வருகிறார். அவர் கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

பெங்களூரு,

வருகிற 18-ந் தேதி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மங்களூரு வருகிறார். அவர் கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

அமித்ஷா வருகை

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்திற்கு அடிக்கடி வருகை தருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை(சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் கர்நாடகத்தில், குறிப்பாக வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரதமர் மோடி கடந்த 4-ந் தேதி பெங்களூருவுக்கு வந்து பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 18-ந் தேதி முதல் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்ய உள்ளார். அவர் கடலோர மாவட்டங்களில் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். 19-ந் தேதி மங்களூரு விமான நிலையம் அருகே பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார்.

கார்வார் மாவட்டத்தில்...

மறுநாள் 19-ந் தேதி குக்கே சுப்பிரமணிய கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதைத்தொடர்ந்து புத்தூர், பண்ட்வால் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் கட்சி கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்திற்கும் அவர் செல்கிறார். 20-ந் தேதி கார்வார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா அங்கு கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அன்று காலை சிரசியில் உள்ள மாரிகாம்பா கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, ஹொன்னாவராவுக்கு செல்கிறார்.

Next Story