திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இருந்து அகற்றம்: “கடைகளை மட்டும் அல்ல, வாழ்க்கையையே இழந்தோம்” பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் பேட்டி
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள், தாங்கள் கடைகளை மட்டும் அல்லாமல், வாழ்க்கையையே இழந்து தவிக்கிறோம் என கண்ணீர் மல்க கூறினர்.
திருச்செந்தூர்,

மண்டபம் இடிந்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பழுதடைந்த கிரிப்பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி கடந்த 14-12-2017 அன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் திருச்செந்தூரை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 43) இறந்தார். 2 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து கிரிப்பிரகார மண்டபத்தை அகற்றி விட்டு, புதிய மண்டபம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அந்த மண்டபத்தை அகற்றும் பணி நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவியாபாரிகள் தாங்கள் குடும்பத்துடன் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும், தங்களுக்கு மாற்று இடத்தில் கடைகள் அமைத்து தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மாற்று இடத்தில் கடை
இதுகுறித்து திருச்செந்தூர் வீரராகவபுரத்தை சேர்ந்த வியாபாரி ராமசாமி (61) கூறியதா வது:- கோவில் வளாகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக பேன்சி கடை நடத்தி வந்தேன். எனது கடை உள்பட அனைத்து கடைகளும் அகற்றப்பட்டதால், என்னை போன்ற சிறு வியாபாரிகள் அனைவரும் வேலைவாய்ப்பு இன்றி பெரிதும் சிரமப்படுகிறோம். திடீரென கடைகளை காலி செய்ய சொல்லி விட்டதால் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த வயதில் வேறு எங்கு போய் வேலை செய்வது. இதை தவிர வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது.
எனக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இனி என் குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறேன் என தெரியவில்லை. எனவே பக்தர்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், கோவில் வளாகத்தில் விரைவில் மாற்று இடத்தில் கடைகளை அமைத்து தர அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்காலம் பாதிப்பு
திருச்செந்தூர் சன்னதி தெருவை சேர்ந்த வியாபாரி பழனிசாமி (56) தெரிவித்ததாவது:-
பல ஆண்டுகளாக குழந்தைகள் விளை யாட்டு பொருட் கள் விற்பனை கடை நடத்தி வந்தேன். தற்போது கடைகள் அகற்றப்பட்டதால், வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். எங்களுக்கு மீண்டும் கடைகளை கோவில் நிர்வாகத்தினர் அமைத்து தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தினமும் கோவிலுக்கு வந்து செல்கிறேன். என் நம்பிக்கை வீண் போகாது என நம்புகிறேன்.
மனைவியை இழந்த நான் என்னுடைய 2 மகள்கள், 2 மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன். 2 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகன், சென்னை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறான். தற்போது அவன் படிப்புக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறேன். திடீரென தொழில் நடத்த முடியாததால் அவனுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. தற்போது கடைகளை மட்டுமல்லாது, வாழ்க்கையையே இழந்து தவிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தள்ளுவண்டியில் வியாபாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி செல்லதங்கம் (30) கூறியதா வது:- நானும், என்னுடைய கணவரும் பல ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் பிளாஸ் டிக் பொருட் கள் கடை நடத்தி பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது, எனது கடை அகற்றப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து, எங்களுடைய 2 குழந்தைகளையும் படிக்க வைக்க முடியாத நிலையில் தவிக்கிறோம்.
எங்களுக்கு மீண்டும் கோவில் வளாகத்தில் கடைகளை நிர்வாகத்தினர் அமைத்து தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறோம். குடும்பத்தை காப்பாற்ற வேறுவழியின்றி தற்போது, தள்ளுவண்டியில் பொருட்களை வைத்து தெருக்களில் விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெருக்களில் விற்பனை
திருச்செந்தூர் சன்னதி தெருவை சேர்ந்த சித்திரைவேல் மனைவி லட்சுமி (58) தெரிவித்ததாவது:-
நானும், என்னுடைய கணவரும் கடந்த 35 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் பேன்சி கடை நடத்தி வந்தோம். எங்களுடைய 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. தற்போது என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் தான் குடும்பத்தை காப்பாற்றி வந்தேன். தற்போது கடைகளை அகற்றி விட்டதால் வேலைவாய்ப்பின்றி பெரிதும் சிரமப்படுகிறோம்.
வேறு வழியின்றி பேன்சி கடையில் இருந்த பொருட்களை தெருக்களில் ஆங்காங்கே வைத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். திடீரென எங்களின் நிலைமை இவ்வாறு மாறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே எங்களுக்கு கோவில் வளாகத்தில் அரசு விரைவில் கடைகளை கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பக்தர்கள் பாதுகாப்பு முக்கியம்
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேசிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருவிழா காலங்களில் 10 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பே முக்கியம். அதனை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களின் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
கோவிலில் இதுவரை 96 கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. இந்த கடைக்காரர்களுக்கு தனியாக வணிக வளாகம் கட்டுவது தொடர்பாக கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அதை தவிர வேறு எந்த கடைகளையும் அகற்றுவதற்கான உத்தரவு தற்போது பிறப்பிக்கவில்லை.

Related Tags :
Next Story