இருமல் மருந்து என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த 92 வயது மூதாட்டி சாவு
நாசரேத் அருகே, இருமல் மருந்து என நினைத்து, பூச்சி கொல்லி மருந்தை குடித்த 92 வயது மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
நாசரேத்,

மூதாட்டி
நாசரேத்தை அடுத்த மேல வெள்ளமடம் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மனைவி தங்கத்தம்மாள் (வயது 92). இவர் தன்னுடைய மகன் ராமையா வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சளி மற்றும் இருமல் தொல்லையால் அவர் அவதிப்பட்டார். எனவே, அவரை குடும்பத்தினர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர், டாக்டர் பரிந்துரைப்படி அவருக்கு இருமல் மருந்து வாங்கப்பட்டது.
பூச்சிகொல்லி மருந்து
கடந்த 7-ந்தேதி இரவில் அவருக்கு இருமல் ஏற்பட்டது. உடனே அவர் வீ்ட்டு அலமாரியில் இருந்த இருமல் மருந்து அருகில் வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து உள்ளார். அது இருமலுக்கான மருந்து என்று கருதி அவர் குடித்து விட்டார். இதனால் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய அவரை, குடும்பத்தினர் மீட்டு நாசரேத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story