பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது
சென்னை பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு, திருமணம் கிராம பஸ் நிறுத்தம் அருகே கடந்த 2-ந் தேதியன்று வண்டலூர்- நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையின் ஓரம் உள்ள முள்புதரில் பெண் ஒருவர் நெற்றி, கன்னம், தோள்பட்டை போன்ற பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன், மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அந்த பெண்ணின் இடது கையில் ஆர்.முனுசாமி, பவித்ரா, மீனா என்றும் வலது கையில் சாந்தா என்றும் பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவர் மெட்டி மற்றும் மூக்குத்தி அணிந்திருந்தார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் திருமணம் பஸ் நிறுத்தம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி, பட்டாளம் தெருவை சேர்ந்த முனுசாமியின் மனைவி சாந்தலட்சுமி (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் இந்த கொலையில் ஈடுபட்டது அவருடன் கட்டிட வேலை செய்யும் சென்னை பாடி விவேகானந்தர் தெருவை சேர்ந்த சுரேஷ் (28) மற்றும் 18 வயதான ஒருவர் என்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் சுரேஷ் கூறியதாவது, நாங்கள் கட்டிட வேலை செய்து வருகிறோம். கடந்த 1-ந்தேதி வேலைக்கு வந்த சாந்தலட்சுமியை அழைத்து கொண்டு வெள்ளவேடு பகுதிக்கு சென்றோம். அங்கு அவரை பலாத்காரம் செய்ய முயன்றோம்.
அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தோம். போலீசாரிடம் நகை திருட்டு போன்று காட்டுவதற்காக அவர் அணிந்திருந்த நகையை எடுத்துச்சென்றோம்.
இதையடுத்து போலீசார் சுரேஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 18 வயதான சிறுவனை சென்னையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Related Tags :
Next Story