உப்பார்பட்டி-உப்புக்கோட்டை இடையே முல்லைப்பெரியாற்றில் தொடரும் மணல் திருட்டு
உப்பார்பட்டி-உப்புக்கோட்டை இடையே முல்லைப்பெரியாற்றில் தொடரும் மணல் திருட்டால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
உப்புக்கோட்டை,
போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் உப்புக்கோட்டை, தேனி ஊராட்சி ஒன்றியம் உப்பார்பட்டி ஆகிய இரு கிராமங்களிடையே உள்ள சமதளபகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முல்லைப்பெரியாற்றில் 10-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள உப்புக்கோட்டை சில்லமரத்துபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், சூலம்புரம், கரட்டுபட்டி, மேலச்செக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் முல்லைப்பெரியாற்றின் கிழக்கே உப்பார்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தப்புக்குண்டு தாடிச்சேரி போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
உப்புக்கோட்டை-உப்பார்பட்டி இடையே முல்லைப்பெரியாற்றில் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக உறைகிணறுகள் உள்ள இடத்திலும், தடுப்பணைகள் அமைந்துள்ள இடத்திலும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள உறை கிணறுகள் சேதமடைந்து வருகிறது. மேலும் இந்த மணல் திருட்டால் தடுப்பணையின் தாங்கும் திறனும் குறைந்து வருகிறது.
இதே போன்று வீரபாண்டி, கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி போன்ற இடங்களிலும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. உறை கிணறுகள் முழுமையாக சேதமடைந்தால் வரும் காலங்களில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story