தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீஸ் பாதுகாப்பு
ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் பேசி உள்ளேன். அங்கு ஆய்வை தொடருவதை தொல்லியல்துறை தான் முடிவு செய்ய வேண்டும்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு உள்ள மாணவர்கள், தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். படிப்பை போன்று விளையாட்டும் முக்கியமானது. இதனால் முதல் முறையாக விடுதி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. ஓடி விளையாடு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள 90 விடுதிகளில் இருந்து 590 மாணவர்கள், 471 மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
வெள்ளி நாணயம் பரிசு
இதில் தடகள போட்டிகள், கோகோ, கபடி, இறகுபந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டி தொடக்க விழா நாளை(அதாவது இன்று சனிக்கிழமை) காலை 8-30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூதொடங்கி வைக்கிறார். போட்டியை காணவரும் பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் வெள்ளி நாணயங்களும் பரிசு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர், ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story