மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலில் பயணம் செய்த வெளிநாட்டு குழு
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலில் வெளிநாட்டு குழுவினர் பயணம் செய்தனர். அவர்கள், மலைரெயில் பழமை மாறாமல் இருப்பதாக பாராட்டினர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் நீலகிரி மலை ரெயில் முக்கியத்துவம் பெறுகிறது. நீலகிரி மலை ரெயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதுரயில் பழமை மாறாமல் இயக்கப்படுவதால் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ரயிலாக உள்ளது.
கடந்த 1899-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயும், 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி குன்னூர்- ஊட்டி இடையேயும் மலை ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மலை ரெயிலின் நிலக்கரி நீராவி என்ஜின் சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும்.
தற்போது குன்னூர்- மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே உள்ள பல் சக்கர தண்டவாளத்தில் பர்னஸ் நீராவி என்ஜின் கொண்டு மலை ரெயில் இயக்கப்படுகிறது. குன்னூர்- ஊட்டி, ஊட்டி - குன்னூர் இடையே பயோ டீசல் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட தண்டவாளம் அவ்வப்போது சீரமைத்து மாறுதல் செய்யப்பட்டாலும் பழமை மாறாமல் உள்ளது. மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே உள்ள ரெயில் நிலையங்கள் பழமை மாறாமல் உள்ளன. இவைகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மலை ரெயில் ஆராய்ச்சி குழுவினர் டொனால்ட் என்பவரின் தலைமையில் இந்தியா வந்தனர். அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் மூலம் குன்னூர் வந்தனர். பின்னர் அவர்கள் கல்லாரில் இருந்து குன்னூர் வரை உள்ள பல் சக்கர தண்டவாளம், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து குன்னூரில் உள்ள லோகோ பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி நீராவி என்ஜின், பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் ஆகியவற்றை பார்வையிட்டு அது குறித்து கேட்டறிந்தனர். இது போல் லோகோ பணிமனைக்கு வெளியே நின்று இருந்த பயோ டீசல் என்ஜினையும் பார்வையிட்டனர்.
இது குறித்து வெளிநாட்டு குழுவினர் கூறும்போது மலை ரெயில், ரெயில் பாதை, ரெயில் நிலையங்கள் பழமை மாறாமல் இருப்பது பாராட்டுக்குரியது என்றனர்.

Related Tags :
Next Story