சம்பள உயர்வு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பதாக சித்தராமையா உறுதி மதிய உணவு திட்ட ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
சம்பள உயர்வு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பதாக சித்தராமையா உறுதி அளித்ததை தொடர்ந்து, மதிய உணவு திட்ட ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
பெங்களூரு,
சம்பள உயர்வு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பதாக சித்தராமையா உறுதி அளித்ததை தொடர்ந்து, மதிய உணவு திட்ட ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். முன்னதாக போராட்டம் நடத்தியவர்களை நேரில் சந்தித்து நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்தார்.
போராட்டம்
கர்நாடக அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சமையலர்கள். பணி பாதுகாப்பு, சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெங்களூருவில் கடந்த 5 நாட்களாக பகல்-இரவாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பள உயர்வு உள்பட கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தை வாபஸ் பெற்று சொந்த ஊருக்கு திரும்புமாறும் கூறினார். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உறுதியான வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று மதிய உணவு திட்ட ஊழியர்கள் சங்க மாநில தலைவி வரலட்சுமி கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்தினார்
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மந்திரி திரும்பி சென்றார். இந்த நிலையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என்றும், முதல்-மந்திரி எங்களை அழைத்து பேச வேண்டும் என்றும் வரலட்சுமி கூறினார். இதையடுத்து அந்த சங்க பிரதிநிதிகளை அழைத்து சித்தராமையா பெங்களூருவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சம்பள உயர்வு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பதாக சித்தராமையா, சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்ததாக தெரிகிறது. இதனை சங்க பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தி வந்த மதிய உணவு திட்ட ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். முன்னதாக போராட்டம் நடத்திய மதிய உணவு திட்ட ஊழியர்களை நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Related Tags :
Next Story