பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
டியூஷன் போகாததை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
ஆவடி காந்தி நகர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா. ஆட்டோ டிரை வர். இவருடைய மகன் காசிநாதன்(வயது 17). இவர், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை காசிநாதன், பள்ளி முடிந்து டியூஷனுக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய பெற்றோர், “ஏற்கனவே 3 பாடங்களில் தோல்வி அடைந்து உள்ளாய். ஏன் டியூசன் போகாமல் வீட்டுக்கு வந்தாய்?” என்று கேட்டு மகனை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த அவர், வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், அறை கதவை திறந்து பார்த்தபோது, அங்கு தங்கள் மகன் காசிநாதன், மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், தற்கொலை செய்த மாணவர் காசிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story