சென்னை ரவுடிகள் புதுவையில் பதுங்கலா? போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
சென்னை ரவுடிகள் பலர் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து தமிழக போலீசார் புதுவையில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி,
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பயங்கர ரவுடி பினு. இவர் தனது கூட்டாளிகளுடன் மாங்காடு அருகே உள்ள வடக்கு மலையம்பாக்கத்தில் தனது பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாக பெரிய அளவில் கொண்டாடினார். இது பற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து 75 பயங்கர ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடம் சோதனை நடத்தி பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லு மதன் என்ற ரவுடியை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசார் பள்ளிக்கரணை பகுதியில் மடக்கிப்பிடித்தனர். அவர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்தான் வடக்கு மலையம்பாக்கத்தில் 75 ரவுடிகளை போலீசார் கூண்டோடு பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலான ரவுடிகளுக்கு அரசியல்வாதிகள் உதவி செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. பினு உள்பட வெளியில் தலைமறைவாக சுற்றும் மீதியுள்ள 678 ரவுடிகளை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் அந்த ரவுடிகளில் சிலர் அங்கிருந்து தப்பி வந்து புதுவையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதாவது, சென்னையைச் சேர்ந்த ரவுடிகளுக்கும், புதுவையில் உள்ள ரவுடிகள் சிலருக்கும் நட்புறவு உள்ளது. புதுவையைச் சேர்ந்த ரவுடிகளில் சிலர் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்ட இருந்த போது அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் போது ஒருவருக்கு ஒருவர் உதவுவதை வழக்கமாக செய்து வந்துள்ளனர்.
தற்போது சென்னையில் போலீசார் ரவுடிகளை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலை தொடர்ந்து அங்கிருந்து சில ரவுடிகள் தப்பி வந்து புதுவையில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை புதுவையில் உள்ள ரவுடிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருப்பதாக போலீஸ் வட்டாரத்துக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் புதுவை வந்து முகாமிட்டுள்ளனர். புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story