பழுதடைந்த அரசு கட்டிடங்களை அகற்ற வேண்டும்


பழுதடைந்த அரசு கட்டிடங்களை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 10 Feb 2018 3:44 AM IST (Updated: 10 Feb 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று அதி காரிகளுக்கு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வளர்ச்சித் திட்ட பணிகள்் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு தலைமை கொறடா பேசிய தாவது:-

அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக்கடைகள் மற்றும் வேளாண்மைத்துறை சார்ந்த அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள் ஏதேனும் பழுது அடைந்திருந்தால், உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும். அதிக அளவு சேதமடைந்த கட்டிடங்களை உடனடியாக அகற்றி விட்டு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான தகவல்களை உடனடியாக துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் வழங்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் நாட்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இடங்களில் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, இணை இயக்குனர் (வேளாண்மை) அய்யாசாமி, இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) நசீர், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story