முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காங்கிரசில் இணைந்தனர்


முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காங்கிரசில் இணைந்தனர்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:28 AM IST (Updated: 10 Feb 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடேயின் தந்தையும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே, இந்திய குடியரசு கட்சியின் செயல் தலைவராக பொறுப்பு வகித்தார்.

மும்பை,

உத்தம் கோப்ரகடே, அக்கட்சியில் இருந்து விலகி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில், நேற்று காங்கிரசில் சேர்ந்தார். இதேபோல், பகுஜன் சமாஜ் கட்சியில் அங்கம் வகித்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிஷோர் கஜ்பியேவும் காங்கிரசில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story