ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மிங் கருவி பொருத்திய வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கைது
ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மிங் கருவி பொருத்திய வெளிநாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை தகிசர் அம்பாவடி பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று காலை இங்கு வந்த ஒரு வெளிநாட்டு நபர் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மிங் கருவியை பொருத்தி செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தகிசர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அன்று மாலை ஸ்கிம்மிங் கருவியை எடுக்க வந்த போது அந்த வெளிநாட்டு நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ருமேனியா நாட்டை சேர்ந்த நெடேலு வேலன்டின் லோனிட் (வயது34) என்பது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய மேலும் ஒரு ருமேனியா நாட்டை சேர்ந்தவர் மும்பையில் இருந்து துபாய் வழியாக பாரிஸ் செல்ல இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மும்பை போலீசார் துபாய் குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். எனவே துபாய் குடியுரிமை அதிகாரிகள் அந்த நபரை துபாய் விமான நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை மும்பைக்கு அனுப்பி வைத்தனர். மும்பை போலீசார் அவரையும் கைது செய்தனர். போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story