ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் அஞ்சலி தமானியாவுக்கு கைது வாரண்டு
அவதூறு வழக்கில் ஆஜராகாத ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர் அஞ்சலி தமானியாவுக்கு கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
மராட்டிய பா.ஜனதா அரசில் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே. ஆனால் அவர் மீது எழுந்த நில அபகரிப்பு, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் கடந்த 2015-ம் ஆண்டு தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாநில அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் அவர் குற்றமற்றவர் என அறிக்கை சமர்ப்பித்தது.
ஏக்நாத் கட்சே மந்திரி பதவியை இழப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், சமூக ஆர்வலருமான அஞ்சலி தமானியா.
விசாரணை ஆணையம் ஏக்நாத் கட்சே குற்றமற்றவர் என அறிவித்து விட்ட நிலையில், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக, ஜல்காவ் மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி தமானியாவுக்கு எதிராக ரேவர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தனர்.
ஆனால் இந்த வழக்கு விசாரணையின் போது, அஞ்சலி தமானியா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் ரேவர் கோர்ட்டு அஞ்சலி தமானியாவுக்கு கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

Related Tags :
Next Story