நெல்லையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,312 வழக்குகளுக்கு தீர்வு


நெல்லையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,312 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Feb 2018 2:00 AM IST (Updated: 10 Feb 2018 8:46 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,312 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நெல்லை,

நெல்லையில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,312 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றம் நெல்லை கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். நீதிபதிகள் அப்துல்காதர், குணசேகர், சந்திரா, ஹேமானந்தகுமார், ஜெயராஜ், கங்காராஜ், கிளாட்சன் பிளசட் தாகூர், பாண்டியராஜ், தனஞ்செயன், ராஜசேகரன், பூவலிங்கம், மாஜிஸ்திரேட்டுகள் ராம்தாஸ், மாலதி, பிஸ்மிதா ஆகியோர் கொண்ட 8 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இதேபோல் அம்பை, தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, ஆலங்குளம், சேரன்மாதேவி, வள்ளியூர், நாங்குநேரி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய ஊர்களுக்கும் தனியாக அமர்வு அமைக்கப்பட்டு இருந்தன.

2,312 வழக்குகளுக்கு தீர்வு

சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குற்றவழக்குகள் என 3 ஆயிரத்து 889 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 312 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.7 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரத்து 865 இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல் கோர்ட்டில் நிலுவையில் இல்லாத 390 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் ரூ.16 லட்சத்து 4 ஆயிரத்து 317 இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story